இந்த டூல், எல்லாருக்கும் பயன்படும்னு சொல்ல முடியாது. தேவையில்லாத அல்லது தெரியாமல் ஒரு பதிவை நீங்கள் உங்கள் blog or website இல் பதிவு செய்து, அது கூகுளில் Index ஆகி இருந்தால், அதை தற்காலிகமாக, கூகிளில் இருந்து நீக்க முடியும். பொதுவா இந்த டூலை பயன்படுத்தி, ஆறு மாதம் வரை, நம்மால் ஒரு பதிவின் URl ஐ, கூகுள் result இல் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
எப்படி remove செய்வது?
1. உங்கள் Siteஇன், Google Search Console பக்கத்திற்கு செல்லுங்கள்.
2. அங்கு வலது புறம், "REMOVALS" என்று ஒரு option இருக்கும், அதை click செய்யுங்கள்.
3. அதன்பின், அந்த page இல் "New Request" என்று ஒரு button இருக்கும் (Red Colour), அதை click செய்யுங்கள்.
4. இப்பொழுது, அங்கே இருக்கும், box இல், எந்த URL ஐ நீக்க வேண்டுமோ, அதை, அந்த இடத்தில paste செய்யுங்கள். பின் Submit அல்லது Continue கொடுங்கள்.
5. அவ்வளவுதான், ஒரு சில மணி நேரங்களில், நீங்கள் கொடுத்த பக்கம், google search result இல் வராது.
URL நீங்கியதா என்பதை தெரிந்து கொள்ள, "site:url" (URL க்கு பதிலாக நீங்கள் நீக்கிய URLஐ மாற்றவும்) என்று search செய்யுங்கள், நீக்கபட்டுஇருந்தால், "No Result Available" என்று காண்பிக்கும்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம். நன்றி!