Reasons for Policy Violations in adsense - i Know Tamil

policy violation reasons

வணக்கம் நண்பர்களே! எல்லாருக்கும் adsense apply செய்து reject ஆகி இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். சிலசமயங்களில் Adsense எந்த ஒரு காரணமும் இல்லாமல் மொட்டையாக "We have found some policy violations in your site" என்று கூறி இருப்பார்கள். இதை நானும் அனுபவித்து இருக்கிறேன். இந்த பதிவில் policy violations வர என்னவெல்லாம் கரணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

Program Policy என்றால் என்ன?

  Google Adsense தனக்கென்று தனியாக ஒரு சில நெறிமுறைகளை கொண்டுள்ளது. அந்த நெறிமுறைகளுக்கு publishers ஆனா நாமும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு publisherன் பதிவுகள்(post), அவர் பயன்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் அவரின் website இவை அனைத்திற்கும் நெறிமுறைகள் உள்ளன. முழுவதுமாக அவர்கள் நெறிமுறைகளை அறிய "adsense program policy" என்று கூகுளில் தேடவும்.

Program Policy Violations எப்படி சரி செய்வது?

  Adsense rejection காரணங்களில் மிகவும் கணிக்க இயலாத ஒன்று இந்த policy violations. குறிப்பிட்டு இதுதான் பிரச்சனை என்று adsense எப்போதும் சொல்வதில்லை. அதனால் எனக்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை சரி பார்த்து பின் apply செய்து பாருங்கள்.

1. Theme மற்றும் website behaviour

  உங்களின் Theme சரியானதாக இருக்கிறதா என்று பாருங்கள, சிலர் பழைய theme ஐ install செய்து இருப்பீர்கள். அதில் உள்ள CODE இப்பொது இருக்கும் HTML, CSS மற்றும் JS உடன் ஒன்றுபடாமல் இருக்கலாமா. எனவே புதிய templateகளை பயன்படுத்தவும். மேலும், உங்களின் website இல் உள்ள அணைத்து பக்கங்கள் மற்றும் பதிவுகளை (post and pages) ஒரு முறை சரி பார்க்கவும். அவை ஒழுங்காக load ஆகிறதா என்று. இதே போல், layout இல் உள்ள அணைத்து gadgetsஐயும் சரிபார்க்கவும்.

2. Copyrighted Image

  இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான், இலவச புகைப்படங்கள் அல்லது நீங்களே உருவாக்கிய புகைப்படங்களை பயன்படுத்தவும். கூகுளில் இருந்து எடுக்கும் சில படங்கள் காப்புரிமை பெற்று இருக்கலாம்.

3. பதிவுகள்

  குறைந்தது ஐம்பதிற்கு மேல் பதிவுகள் பதிவிடவும். சில சமயங்களில் இதும் ஒரு காரணமாக அமையலாம். அதே போல் உங்களின் பதிவுகளின் அளவும் பெரிதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். குறைந்தது 500 வார்த்தைகளுக்கு குறையாமல் எழுதவும். உங்களின் பதிவுகள் அனைத்தும் உங்களுடைய சொந்த முயற்சியில் எழுதவும். பிற பதிவுகளை copy செய்வது வேண்டாம்.

4. Privacy Policy

  உங்களுடைய பக்கத்திற்கு Disclaimer, Terms and Conditions மற்றும் Privacy Policy அனைத்தையும் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். Online generator மூலமாக உருவாக்கினாலும், அவற்றில் உள்ள தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, எங்களின் site ஐ பார்த்துக்கொள்ளுங்கள்.

5. Repeated Content

  Follow by mail, Recent Post மற்றும் Tags or categories ஐ ஒரு முறை வைத்தால் போதுமானது. வெவ்வேறு இடத்தில வைக்க வேண்டாம். ஆனால் Disclaimer, Terms and Conditions மற்றும் Privacy Policy இவை site ன் மெனு பார் மற்றும் புட்டர் இரண்டு இடத்திலும் இருக்கலாம்.

6. Broken Link or Dead Link

  Broken Link Checker site ஐ பயன்படுத்தி உங்களின் websiteஇல் ஏதேனும் broken links உள்ளதா என்று check பண்ணவும். அப்படி ஏதேனும் இருந்தால் அதை நீக்கிவிடவும்.
  இந்த ஆறு காரணங்கள் மட்டும்தானா என்று கேட்டால், அதற்க்கு பதில் இல்லை. எல்லாருக்கும் தெரியாத முடியாத சிறிய சிறிய காரணங்கள் இருக்கும். Adsense கிடைக்கும் வரை உங்களுக்கு தோன்றும் அனைத்தையும் மாற்றியமைத்து சரி செய்து apply செய்து கொன்டே இருங்கள். All the Best!
Previous Post Next Post