Tips in Blog Theme | Blogger Series - i Know Tamil

Blogger theme settings

1. Blogger Theme ஐ எப்படி மாற்றுவது?

  உங்களின் blogger பக்கத்திற்க்கு செல்லவும். அங்கு உள்ள Theme option ஐ click செய்யவும்.

  CUSTOMISE button ஐ அழுத்தவும். அதில் backup என்ற option ஐ click செய்து உங்களின் பழைய themeஐ பத்திரப்படுத்த வேண்டும். ஏனென்றால் சில சமயங்களில் புதிதாக பதிவேற்றப்படும் theme சரியாக இருக்காது. [முக்கியம்]

  பழைய theme ஐ Save செய்தவுடன் மறுபடியும் CUSTOMISE பட்டனை click செய்யவும். அதில், backup க்கு கீழ் உள்ள RESTORE option ஐ click செய்யவும். இப்போது நீங்கள் downloadசெய்து வைத்துள்ள theme (.xml file) ஐ பதிவேற்றவும். அவ்வளவுதான் முடிந்தது.

2. Theme நிறத்தை எவ்வாறு மாற்றுவது?

  உங்களின் blogger பக்கத்திற்க்கு செல்லவும். அங்கு உள்ள LAYOUT option ஐ click செய்யவும்.

  அங்க மேல "THEME DESIGNER" னு blue color ல் இருக்கும். அதை click செய்யவும்.

  அங்கு உங்க blogger இல் உள்ள அணைத்து options கும் color மாற்றம் செய்துகொள்ளலாம். Exampleக்கு உங்களோட MENU BAR, FOOTER மற்றும் HEADER.

3. CSS add செய்யும் முறை

  உங்களின் blogger பக்கத்திற்க்கு செல்லவும். அங்கு உள்ள LAYOUT option ஐ click செய்யவும்.

  அங்க மேல "THEME DESIGNER" னு blue color ல் இருக்கும். அதை click செய்யவும்.

  அங்கு Advanced Settings ஐ click செய்யவும். அதில் ADD CSS என்ற இடத்தில உங்களின் CSS codeஐ paste செய்யவும். பிறகு save கொடுத்தவுடன் உங்களின் CSS themeஇல் சேர்ந்துவிடும்.

4. CSS, Java Script and Webfont (google fonts) ஐ சேர்க்கும் முறை

  CSS உங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியின் color, size ஆகியவற்றை முடிவு செய்யும் code.

  Java Script இது ஒரு பகுதி எப்படி வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்கிறது. உதாரணத்திற்கு Quiz code (எது சரி/தவறு என்று பயனர் (user input) உள்ளீடு பொறுத்து மதிப்பெண் தரும்.

  WebFonts - உங்களின் blog இல் font style ஐ மாற்ற கண்டிப்பாக உங்களின் விருப்ப fontஇன் link, உங்கள் theme இல் இடம் பெற்று இருக்க வேண்டும்.

  மேற்கண்ட மூன்றும் சேர்க்க, THEME சென்று --அதில் Edit HTML ஐ click செய்யவும். அங்கு உள்ள <head>...</head> இதற்க்கு இடையில் தான் அந்த link ஐ சேர்க்க வேண்டும்.

5. Mobile Theme சரி செய்வது

  புது theme upload செய்தவுடன் உங்களின் mobile இல் உங்கள் site ஐ பாருங்கள் theme மாறியிருக்காது. இதை சரி செய்ய, THEME சென்று -- அங்கு CUSTOMISE ஐ click செய்யவும் -- அதில் கடைசியாக இருக்கும் Mobile Settings க்கு செல்லவும்.

  இப்பொழுது ஒரு புதிய screen ஒன்று தோன்றும். அதில் கேட்கப்படும் முதல் கேள்விக்கு MOBILE என்ற option ஐ தேர்ந்தெடுக்கவும்.

  பின் கீழே இருக்கும் Choose mobile theme ஐ click செய்து கடைசிக்கு scroll செய்யவும். அங்கு CUSTOM என்ற option இருக்கும் அதை தேர்வு செய்யவும். இப்பொழுது save செய்த பிறகு, mobile இல் உங்கள் site பாருங்கள் desktop இல் இருப்பதை போலவே mobileலிலும் இருக்கும்.

இன்னும் blog ஐ பற்றி தெரிந்து கொள்ள எங்கள் YOUTUBE சேனலை subscribe செய்யவும்.

i Know Tamil - Youtube Channel
Previous Post Next Post